அழைத்தாரே இயேசுவே
அன்போடென்னை அழைத்தாரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
1.
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர்த்தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றாரே வந்தேனிதோ – அழைத்தாரே
2.
என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனம்
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தார்
எப்படி நான் மறப்பேன்? – அழைத்தாரே
3.
ஆதி விசுவாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் – அழைத்தாரே
4.
எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடவா
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் – அழைத்தாரே
5.
ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நகர வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் – அழைத்தாரே
6.
பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் – அழைத்தாரே
azhaithdhare iyesuve
anbodennai azaithdhare
aandavar sevaiyile maribbene
aayathdhamanen theve
1.
en janam pavaththil malkirathe
en uyirdhanthen mannuyirkke
en thuyara thonien ithai yar inru ketpaare
en kariyamaka yarai azhaippen
enrare vanththenitho – azhaithdhare
2.
ennathan theengu nan illaiththen
ennai vittodum en janam
ethanai nanmaikal unakkaka nan seythenallo
enre uraiththennai eengki azhaithdhar
eppadi nan marabben? – azhaithdhare
3.
aathi visuvasam dhangkitave
aantavar anbu perukitave
aathi appostharale upathesham alithdhanare
nal purana thiyaka pathai natanthe
nanriyudan uzaippen – azhaithdhare
4.
enthdhan jepathai keddidume
eezai janaththai meeddidume
enthdhan pitha sithdhame en bojanamum athuve
en birananaikkuta nesiththidamal
ennaiyum obpadaiththen – azhaithdhare
5.
aatamparangkal meddimaikal
aasabachangkal perukiduthe
aayiram aayirame nakara vazi pokinrare
aa! neereyallamal yarundu meedka
aantavare irangkum – azhaithdhare
6.
pakkiyamana sevaiyithe
padham paninththe seythiduven
aayul mudiyum varai kiristhesu varukai varai
anbin manaththazmai unmaiyum kaththu
aantavarai adaiven – azhaithdhare